Saturday, 31 December 2016
புத்தாண்டு கொண்டாட்டம் 2017
பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் சார்பில் புத்தாண்டுக் கொண்டாட்டம் .. வட்டத்திற்குள் பந்து அடித்தல், கயிறு இழுத்தல், லெமன் டீ ஸ்பூன், வேகமாக நடத்தல் என 31.12.2016 இரவு 9 மணி முதல் புதுச்சேரி இலாசுப்பேட்டை, தாகூர் கலைக் கல்லூரி மைதானம் எங்கள் பகுதி மக்களாம் அல்லோகலப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இலாசுப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் பரிசுகள் வழங்கினார். கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றோம். குடித்துவிட்டு கும்மாளம் போட்டு வரவேற்றால் தான் புத்தாண்டு என்று அல்ல. இது போல சக பகுதி மக்களோடு இணைந்து கொண்டாடினால் அதிலுள்ள சந்தோசமே தனிதான் .. மகிழ்வோடு பிரிந்து சென்றோம்...
Monday, 28 November 2016
Subscribe to:
Comments (Atom)