பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா 14.4.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் இலாசுப்பேட்டை வாசன் நகர் பிரைட் ஸ்கூலில் நடைபெற்றது. நிகழ்வுக்கு திருமதி.ஆண்டாள் தலைமை தாங்கினார். செயலாளர் அருள்மதிபாரதி வந்திருந்தோரை வரவேற்றார். தலைவர்.கொ.இரா.இரவிச்சந்திரன் மகளிர் தினத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய திருமதி ஆண்டாள் நிகழ்வில் இன்னும் அதிகமான பெண்கள் பங்கேற்க வேண்டுமென்ற தனது ஆசையினை வெளிப்படுத்தினார். "சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு" எனும் தலைப்பில் வழக்கறிஞர்.திருமதி.வீ.உஷா சிறப்பாகப் பேசினார். குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் தொலைக்காட்சிகள் எத்தகைய பிற்போக்குத்தனமான கருத்துக்களை மக்கள் மனதில் விதைக்கின்றன என்பதையும், குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பேசி வந்தாலே பெரும்பாலான பிரச்சினைகள் தவிர்க்கப்படும் என்பதையும் விளக்கிப் பேசினார்.
திருமதி.இந்திரா நன்றி கூறினார். முன்னதாக மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு
வழக்கறிஞர்.திருமதி.வீ.உஷா பரிசுகள் வழங்கினார்.
திருமதி.இந்திரா நன்றி கூறினார். முன்னதாக மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு
வழக்கறிஞர்.திருமதி.வீ.உஷா பரிசுகள் வழங்கினார்.