Wednesday, 20 December 2017

பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்க 2ம் ஆண்டு தொடக்க விழா...

பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா 20.12.2017 அன்று நடைபெற்றது... நிகழ்வுக்கு தலைவர் திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பேரா.சூரியப்ரகாஷ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் திரு.முருகன் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் திருமதி.அருள்மதி பாரதி ஓராண்டு செயல்பாட்டு அறிக்கையினை வாசித்தார். பொருளாளர் திரு.சம்பந்தம் வரவு செலவு கணக்கினை வாசித்தார். திரு.கே.முருகன் சிறப்புரை நிகழ்த்தினார். உறுப்பினர்கள் சங்க செயல்பாடுகள் குறித்து கருத்துக்களை பதிவு செய்தனர். திருமதி.இந்திரா நன்றி கூறினார்.









Sunday, 17 December 2017

இரண்டாம் ஆண்டு தொடக்க விழா


பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்கம்
இரண்டாம் ஆண்டு தொடக்க விழா
நாள் : 20.12.2017 – புதன் கிழமை இரவு 8 மணி
இடம் : பிரைட் ஸ்கூல் அனெக்ஸ் வளாகம் – 4 வது தெரு, வாசன் நகர்,
இலாசுப்பேட்டை, புதுச்சேரி 605008
நிகழ்வு நிரல் :
·        ஓராண்டு பணிகள் – செயலர் அறிக்கை ;
·        ஓராண்டு வரவு செலவு அறிக்கை ;
·        பாதாள சாக்கடை இணைப்பு, மின் கம்பங்கள் அமைத்தல், சாலை வசதி கோரி எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ;
சிறப்புரை :
திரு.சி.ஹெச்.பாலமோகனன்
ஒருங்கிணைப்பாளர் – புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கம்
அனைவரையும் அன்புடன் அழைத்து மகிழும்
கொ.இரா.இரவிச்சந்திரன்                        அருள்மதிபாரதி
       தலைவர்                                         செயலாளர்                                                 
                    மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்
வாழுமிடத்தை மகிழ்வானதாக ஆக்குவோம் ..
அனைவரும் சேர்ந்தே இருப்போம் … சகிப்புத்தன்மையுடன் வாழ்வோம் …

விட்டுக் கொடுத்து வாழ்வோம் .. வாழ்வை இனிமையானதாக ஆக்குவோம்…

Sunday, 6 August 2017

சிறப்புக் கூட்டம் - வீட்டில் காய்கறி தோட்டம் அமைப்போம் - நோயின்றி வாழ்வோம்

இன்று 06.08.2017 மாலை பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் சார்பில் "வீட்டில் காய்கறி தோட்டம் அமைப்போம் - நோயின்றி வாழ்வோம்" எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திரு.டி.சரவணன் (பொறுப்பாளர் - ஆரண்யா சமூகக் காடுகள், பூத்துறை (ஆரோவில்) மற்றும் திரு.ராமநாதன் ( தேசிய நல்லாசிரியர் விருதாளர் - கலைமாமணி விருதாளர் - இயற்கை ஆர்வலர் ) கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். நிகழ்வுக்கு வந்திருந்தோரை செயலாளர்.அருள்மதிபாரதி வரவேற்றார். திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். திரு.முருகன் நன்றி கூறினார். நிகழ்வில் மாடித்தோட்டம் அமைப்பது, பராமரிப்பது, உரம் தயாரித்தல், எருவிடுதல் உள்ளிட்ட பல விஷயங்கள் விரிவாக எடுத்துக் கூறப்பட்டன.









மக்களை டெங்குவிடமிருந்து காக்க நிலவேம்பு குடிநீர் வினியோகம்...

பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் சார்பில் மக்களை டெங்குவிடமிருந்து காக்க "நிலவேம்பு"க் குடிநீர் வினியோகம் சக நண்பர்களுடன் .. நல்ல அனுபவம். வித்தியாசமான அனுபவம் .. மக்கள் நிறைய பாராட்டினார்கள் ... சித்த மருத்துவத்தின் புகழை பரப்பும் இது போன்ற பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டும் என்று ஆசை ...










Saturday, 29 July 2017

துணைநிலை ஆளுநருக்கு மனு

புதுச்சேரி இலாசுப்பேட்டையிலுள்ள வாசன் நகர், கீதா நகர், செவாலியே சீனுவாசன் நகர், வெங்கடேஸ்வரா நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துணை நிலை ஆளுநருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் :
- அரசு ஊழியர் குடியிருப்பு போலீஸ் அவுட் போஸ்ட்டை காவல் நிலையமாக தகுதி உயர்வு செய்ய வேண்டும் ;
- பாதாள சாக்கடையினை வீடுகளுக்கு இணைக்கு பணியினை விரைந்து முடிக்க வேண்டும் ; இடைக்கால ஏற்பாடாக சைடு வாய்க்கால் அமைத்துத் தர வேண்டும்.
- பழுதடைந்துள்ள நகரத் தெருக்களை செப்பனிட்டுத் தர வேண்டும்.